Saturday, December 27, 2008

இலங்கை பிரதி அமைச்சர் இந்திய மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டார்.

இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா அவர்கள் இந்தியாவிற்கு பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.இன்று பிற்பகல்
அவர் இந்தியாவின் மிகப்பிரபலமான அன்னை வேளான்கன்னி ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவருடைய வாகனத்தை இடைமறித்த இந்திய மீனவர்கள் அவருக்கெதிரான கோஷங்களை எழுப்பியதுடன் வன்செயலிலும் இறங்க முற்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் திரு. ஹம்சா, மேற்படி சம்பவத்தில் அமைச்சருக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் இலங்கை கடல்பரப்பில் இடம்பெறுகின்ற இந்திய இலங்கை மீனவர்கள் சார்ந்த விடயங்களின் எதிரொலியாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment