Tuesday, December 23, 2008

சின்னப்பரந்தன் படையினர் வசம்.

பரந்தன் பகுதியிலமைந்துள்ள புலிகளின் 300 மீற்றர் மண் பாதுகாப்பு அணைகளை உடைத்து முன்னேறியுள்ள படையினர் இன்று காலை கிளிநொச்சியில் உள்ள சின்னப்பரந்தன் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்புச்செய்திகள் தெரிவிக்கின்றன.

ஓர் சிறந்த விவசாயக்கிராமமாக விளங்கிய இப்பிரதேசம் கடந்தகாலங்களில் புலிகளது யுத்த பிரதேசங்களில் மிக முக்கியமானதொன்றாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அங்கு புலிகள் பல வகைப்பட்ட பாதுகாப்பரன்களையும் அமைத்து வைத்திருந்தனர் என்பது தெரியவந்துள்ளதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது புலிகளது ஒரு சடலமும் ரி56 ரக துப்பாக்கி ஒன்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment