சிறுவர்களின் வலுவாக்கத்திற்கு கிழக்கு மாகாண சபை நடவடிக்கை விஷேட கலந்துரையாடல் தீர்வு
மிகப் பின்னடைவை எதிர் நோக்கி வந்த கிழக்கு மாகாண சிறுவர்களின் கல்வி நிலையினை விருத்தி செய்வதுடன் கிழக்கு மாகாணத்தில் சுமார் 1535 முன் பள்ளிப் பாடசாலைகளில் 54771மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் வேதனம், கல்வி கற்கும் பொதுக் கொள்கைப் படிமுறை, பயிற்சிகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் 09.12.2008 ம் திகதி பிற்பகல் 03.30 மணிக்கு யுனிசெப் இலங்கைக்கான பதில் பிரதிநிதி பிலிப் டிடல் மற்றும் திருகோணமலை மாவட்ட உயர் அதிகாரி ஜோர்ச் ஹசிகி ஆகியோருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடலின் போதே மேற் கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மேலோங்கி வருகின்ற இக் காலத்தில் தொடர்ந்தும் ஜனநாயத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு சிறுவர்கள் மத்தியில் கல்வி விருத்திக்கு வித்திடுவது மிக முக்கியமானதாகும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இவ் விடயத்தில் மிக உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.கிழக்கு மாகாண கல்விச் சாலைகள் விருத்திக்கும், மாணவர்களின் ஏழ்மை நிலையினைப் போக்கி கல்வி கற்கக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு கிழக்கு மாகாண சபை எடுத்து வரும் முன்னெடுப்புக்களுக்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் அதிகரித்து வருவது குறித்து தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் எந்த வேளையிலும் சிறுவர் வலுவாக்கத்திற்கும், மீளக் குடியேற்றப்பட்ட மக்களின் குடிநீர், சுகாதார, பிரச்சனைகளுக்கும் தங்களால் உதவிகளை வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அசாத் ,
முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் முதலமைச்சரின் மக்கள் தொடர்பு உத்தியோகஸ்தர் திருடதி. யூடி தேவதாசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment