Tuesday, December 23, 2008
யுத்த நிறுத்தம் ஓன்று ஏற்படப்போவதில்லை. சரத்பொன்சேகா
இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் யுத்த நிறுத்தம் ஓன்றிற்கு செல்ல வேண்டிய தேவை படையினருக்கு கிடையாது என இராணுவத்தளபதி ஐலன்ட பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பல்வேறு முனைகளிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புலிகளினுடைய மிக முக்கியமான நிலை ஒன்றை இன்னும் சில நாட்களில் கைப்பற்ற நாம் திட்டமிட்டுள்ளோம். அந்நிலையில் நாம் யுத்தநிறுத்தம் ஓன்றிற்கு போவதனூடாக எம்முடைய அத்திட்டத்தை இடைநிறுத்த முடியாது.
யுத்த நிறுத்தம் கடந்த காலங்களில் புலிகளால் தவறாகவே பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. இன்று புலிகளின் கட்டுபாட்டை மீறி பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளினுள் வந்து கொண்டிருப்பதுடன் அவர்கள் படையினரது நடவடிக்கைகளை புகழ்ந்து பேசியும் அதையிட்டு மகிழ்ச்சி அடைந்தும் உள்ளனர்.
No comments:
Post a Comment