Friday, December 5, 2008

எமது படையை தோற்கடிக்க முடியாது. பாரளுமன்ற உறுப்பினர் முரளிதரன்.



நேற்று அவசரகாலச் சட்டத்தினை ஒருமாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் பேசிய பாரளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் இலங்கை இராணுவத்தை புலிகளால் தோற்கடிக்க முடியாது என கூறிள்ளார்.

அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில், இலங்கையிடம் மிகவும் பலமான படைப்பலமுள்ளது. அவர்கள் இன்று பயங்கரவாதத்தை தோற்கடிக்க மிகவும் சிறப்பாக செயற்படுகின்றனர். ஏனெறால் அவர்களை வழிநடாத்த இன்று இலங்கையிலே ஓர் சிறந்த தலைமைத்துவம் அமைந்துள்ளது. புலிகளது மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் பற்றி எனக்கு சொந்த அனுபவம் உள்ளது. புலிகளுடைய செயற்பாடுகளால் மக்கள் இன்று சொல்லொண்ணாத்துயரங்களை அனுவபிக்கின்றனர். இங்கு புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு. புலிகள் தமிழ் மக்களது தேவைகளை நிவர்த்தி செய்யத்தவறி உள்ளனர். நான் என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து பேசுகின்றேன், இலங்கை இராணுவம் மிகவும் பலம்வாய்ந்த இராணுங்களில் ஒன்று. புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கைப் படைகளின் பலத்திற்கு அஞ்சி நடுங்கியிருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறந்த தலைமைத்துவம் இருக்கின்றபோது எமது இராணுவம் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் என்றார்.

No comments:

Post a Comment