புலிகளை ஆதரித்துப் பேசினால் சட்ட நடவடிக்கை: புலிகள் வேறு இலங்கைத் தமிழ் மக்கள் வேறு கருணாநிதி எச்சரிக்கை.
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசினாலும் ஆதரவாக செயல்பட்டாலும் ஆவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழீழ அங்கீகார மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நடைபெறும் நிலையில் முதல்வரின் இந்த எச்சரிக்கை வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தால் இரு கட்சியினரிடையே மோதல்போக்கு முற்றியது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது ஏன்று கூட காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு 'விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுகதான் முடிவெடுக்க வேண்டும்' என்று கூறினார்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு பொலீஸார் தடை விதித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் சென்றனர். 'தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன்' மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நீதிமன்றம்.
நீதிமன்ற உத்தரவையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
முதல்வரின் திடீர் ஏச்சரிக்கை... அந்த நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் 'இலங்கைத் தமிழர் பாதுகாப்புதான் திமுகவின் குறிக்கோள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போரை திமுக ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்துப் பேசினாலும், செயல்பட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட மாநில அரசு தயக்கம் காட்டாது. எந்த ஏச்சரிக்கை ஏல்லோருக்கும் பொருந்தும்'' ஏன்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment