Friday, December 26, 2008

முள்ளியவளை இராணுவத்தினர் வசம். புலிகளின் தொலைத் தொடர்பு கோபுரமும் அடங்குகின்றது.



ஏ34 ஒட்டி சுட்டான் முல்லைத்தீவு வழியாக முன்னேறிய படையினர் புலிகளின் பலத்த எதிர்ப்பை முறியடித்து முள்ளியவளைப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். நேற்று முள்ளியவளைப்பிரதேசத்தினுள் புகுந்திருந்த படையினருக்கும் அப்பிரதேசத்தில் ஆங்காங்கே மறைந்திருந்த புலிகளுக்குமிடையில் பலத்த துப்பாக்கிச் சமர் இடம்பெற்றதாகவும் படையினருடைய எதிர்த்தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாத புலிகள் முற்று முழுதாக அங்கிருந்து வாபஸ் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

முள்ளியவளைப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த படையினர் புலிகளின் 40 அடி உயராமான தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றைக் பைப்ற்றியுள்ளனர். புலிகளின் சகல தொலைத்தொடர்புகளுக்கான மையமாக விளங்கிய இத்தொலைத் தொடர்பு கோபுரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக புலிகள் அமைத்திருந்த 3 பாதுகாப்பு அரண்களும் படையினரால் நிர்முலமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரதேசத்தில் தேடுதலில் ஈடுபட்ட படையினர் புலிகளின் சடலமொன்றையும் தொலைத்தொடர்புக் கருவி ஒன்றையும் கண்டெடுத்துள்ளதாகவும் ஏ34 ஒட்டிசுட்டான் முல்லைத்தீவு வீதியில் 9 கிலோமீற்றர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment