கட்டார் இலங்கை தூதரகம் முன்னாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சந்தேகத்திற்கிடமான இரு பார்சல்கள்.
கடந்த 17 டிசம்பர் கட்டார் மதினா சயிட் நகரில் இலங்கைத் தூதரகம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜரோ வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான இருபார்சல்கள் காணப்பட்டதை தொடர்ந்து வாகன உரிமையாளர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். அங்கு மோப்பநாய்கள் சகிதம் விரைந்த பொலிஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தூதரக அதிகாரிகளை உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேற்றியதுடன் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர்.
அங்கு இரண்டு மணித்தியாலயங்கள் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அவ்விரு பார்சல்களும் வெறும் துணி பார்சல்கள் என்றும் அவை தனது வாகனத்தை அடயாளம் கண்டுகொள்ளத் தவறிய பெண்மணி ஒருவர் அவசரத்தில் அவ்வாகனத்தில் வைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment