ஐ.தே.கட்சியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர்.
அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பீடத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம் அஸ்வர் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் அங்கு கூறியுள்ளதாவது ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்ட்டுள்ளர். கட்சியின் செயற்குழுவில் முஸ்லிம் ஒருவரைத்தன்னும் நியமிக்க கட்சித்தலைவர் தவறிவிட்டார். இது விடயத்தில் முஸ்லிம்கள் தமது அதிருப்தியை என்னிடம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலும் உயர்பதவிகளிலும் முஸ்லிம்கள் இருந்து வந்ததை நினைவு கூர்ந்த அவர் அவர்களின் பதவிகள் பெயர்கள் என்பனவற்றையும் விலாவாரியாக எடுத்துரைத்ததுடன் முஸ்லிம்கள் அக்கட்சிக்கு செய்து வந்த தொண்டை கட்சியின் தலைவர் ஒரு முறை மீட்டிப்பார்க்க வேண்டும் எனவும் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment