கல்முனை கொள்ளைச் சம்பவங்கள் நால்வர் கைது; துவக்கும் கைப்பற்றப்பட்டது
கல்முனைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் அசம்பாவிதங்கள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரிப்பீற்றர் ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
அப்துல் மஜீத் ரிபாஸ் (26 வயது முந்தியடி, அலியார் வீதி, சாய்ந்தமருது 10), அப்துல் ஜபார் முகமது ரியாஸ் (17 வயது முந்தியடி, அலியார் வீதி சாய்ந்தமருது 3), ஆதம்பாவா முகமது ரிஸ்வான் (17 வயது முந்தியடி, அலியார் வீதி, சாய்ந்தமருது12) மற்றும் சலீக்கான் முகமது சாஜகான் (17 வயது இராமோதய வீதி சாய்ந்தமருது 10) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.
இங்கு சுமார் 4,22,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன. அவற்றில் பல பொருட்களும் இதன் போது பொலிஸாரால் மீட்கப்பட்டுமுள்ளது.
0 comments :
Post a Comment