Sunday, December 28, 2008
கிழக்கில் புதியதோர் சுதந்திர வர்த்தக வலயம்.
எதிர்வரும் வருடம் கிழக்கு மாகாணத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சினால் புதிய சுதந்திர வர்த்தக வலயம் ஒன்று நிறுவப்படவுள்ளது. இதன் பொருட்டு 500 மின்லியன் ருபாய்களை அரசு ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளதுடன் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய வேலைத்திட்டங்களையும் இனம் கண்டுகொண்டுள்ளதுடன் அமைச்சிற்கு அவற்றை பரிந்துரைத்துள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்கள் நாட்டின் வடகிழக்கு தவிர்ந்த பெரும்பாலான மாகாணங்களில் அமைந்துள்ளது. அவ் வலயங்களுடாக அனேகமான மக்கள் வேலைவாய்ப்புப் பெற்று வருகின்றனர். மேற்படி வலயம் கிழக்கில் அமையும் பட்சத்தில் அங்கு நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தின் ஒரு தொகுதி நிவர்த்தி செய்யப்படும் என கருதப்படுகின்றது. இவ்வலயங்களுடாக விவசாயம் மற்றும் கைத்தொழில் சார்ந்த துறைகள் அங்கு ஊக்குவிக்கப்பட இருப்பதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment