நிதிமன்ற உத்தரைவை நிறைவேற்ற மறுக்கின்றது அரசு.
புதன்கிழமை நள்ளிரவுமுதல் அமுலுக்குவரும் வகையில் ஒரு லீற்றர் பெற்றோலை கட்டுப்பாட்டு விலையாக 100 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி புதன்கிழமை நள்ளிரவுமுதல் பெற்றோலின் விலை 100 ரூபாவாகக் குறைக்கப்படாது என அறிவித்துள்ள அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவை கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தினியாவல பாலித தேரர் மற்றும் சட்டத்தரணி ரவி ஜெயவர்த்தன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதியரசர் சரத்.என்.சில்வா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பெற்றோல் மீது விதிக்கப்படும் 18 வீத வரி அறவீடு 100 ரூபாவைவிட அதிகரிக்கக் கூடாது என நீதியரசர் சரத்.என்.சில்வா உத்தரவிட்டிருன்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment