இக்பால் அத்தாஸ் மிரட்டல் வழக்கின் சந்தேக நபர்கள் விடுதலை.
1998ம் ஆண்டு சண்டே ரைம் எனப்படும் வாரஇறுதிப் பத்திரிகையின் இராணுவ ஆய்வாளரான இக்பால் அத்தாசின் வீட்டினுள் நுழைந்து அவரை அச்சுறத்தியதுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அடித்து துன்புறத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இலங்கை விமானப்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி குற்றச்சாட்டுக்களுக்காக விமானப்படையின் எச்.எம். ருக்கமன் கேரத் மற்றும் டொன் பிரதீப் சுஜீவ கன்னங்கர ஆகியோர் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் 7ம் திகதி குற்றவாளிகள் என கண்ட மேல் நீதிமன்றம் 9 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.
இத் தீர்புக்கெதிராக குற்றவாளிகள் மேல் மேன் முறையீட்டு நீதிமன்றில் செய்த முறைப்பாட்டை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஐ. இமாம் மற்றும் சறத் டீ ஆப்று ஆகியோர் குற்றச்சாட்டுக்களை நிருபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளனர்.
இதில் எச்.எம். ருக்கமன் கேரத் எனும் அதிகாரி தனிப்பட்ட பிணக்குகளின் நிமித்தம் நாராயன்பிட்டி பிரதேசத்தில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுச்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment