முன்னாள் பா.உ ஜனாப் ஏ.எம். சம்சுத்தீன் அவர்கள் காலமானார்.
கல்முனைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய அரபுக் குடியரசிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான ஜனாப் ஏ.எம். சம்சுத்தீன் அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்.
அன்னாரின் இழப்பையிட்டு ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில்
கல்முனைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஜனாப் ஏ.எம். சம்சுத்தீன் அவர்கள் காலமான செய்தியறிந்து நான் ஆழ்ந்த சோகத்துக்குள்ளானேன்.
கல்முனைப் பிரதேசத்தின் கீர்த்திமிகு சட்டத்தரணிகளுள் ஒருவரான ஜனாப் சம்சுத்தீன் அவர்கள், சட்டத்துறை மூலமாக தனது பிரதேச மக்களுக்கு பாரிய சேவையாற்றியுள்ளார். மேலும் பிரதேசத்தின் இன நல்லுறவு மேம்பாடு தொடர்பிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இலங்கையின் பிரதிநிதியாக ஐக்கிய அரபுக் குடியரசில் இலங்கைக்கான தூதுவராக அன்னார் பணியாற்றிய காலகட்டத்தில் அவரது அர்ப்பணிப்பான சேவைகள் காரணமாக இலங்கைக்கு பொருளாதார ரீதியிலும், ஏனைய துறைகளிலும் பாரியளவான நன்மைகள் கிட்டக் காரணமாக இருந்தார். அவ்வாறாக தான் வகித்த பதவிகள் மூலமாக தனது பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் அரும் பெரும் சேவையாற்றியவர் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றியுடன் நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டுக்கு நன்மை பயக்கும் வண்ணமான சந்ததியொன்றை உருவாக்கி விட்டுச் சென்றுள்ள மர்ஹும் ஏம். சம்சுத்தீன் அவர்களின் மறைவால் துயருறும் அன்னாரின் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலஞ்சென்ற ஏ.எம். சம்சுத்தீன் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் சுவனபதி கிட்டுவதற்காகப் பிரார்த்திக்கிறேன்.
0 comments :
Post a Comment