புலிகளின் பெயரில் கொழும்பில் கப்பம் பெற முயன்ற மூவரை விசேட பொலிஸ் பிரிவினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு நகரில் வர்த்தகர் ஒருவரிடம் விடுதலைப்புலிகள் என தம்மை அறிமுகப்படுத்தி கப்பம் பெறமுயன்ற மூவர் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைபேசி ஊடாக குறித்த வர்த்தகரிடம் தம்மைப் புலிகள் எனத் அறிமுகப்படுத்திய மேற்படி நபர்கள், வர்தகரிடம் 5 லட்சம் ரூபாவை கப்பமாகப் பெற முயன்றுள்ளனர் என்றும் கப்பம் பெறவந்த சமயமே பொலிஸ் விசேட பிரிவினர் இவர்களை கைது செய்தனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித்குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாஎல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் மற்றைய இருவரும் மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றது.
0 comments :
Post a Comment