புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை; பா.உ வினாயமூர்த்தி-முரளிதரன் நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்ட புலிபாய்ந்தகல் பிரதேசத்தை அண்டிய மக்கள் மிக நீண்ட காலமாக சுகாதார வசதியின்றி அல்லல் பட்டுவந்தனர். அப்பகுதி மக்கள் தமது குறைபாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலையை அமைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு நீண்ட நாட்களாக கிரான் பிரதேசத்துக்கு நிரந்தர தபாலக கட்டிடம் இல்லாத குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தபாலகத்திற்கு நிரந்தர காணி ஒதுக்கப்பட்டுள்ளதோடு தபாலக கட்டிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் வாழச்சேனை இந்துக் கல்லூரியை அப்பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு முரளிதரன் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment