Thursday, December 4, 2008

ஐ.நா சபையின் யுனிசெப் உடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உடன்படிக்கை.




தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறுவர்களை தொடர்ந்தும் இணைத்துக்கொள்வதில்லை என ஐ.நா சாபையின் யுனிசெப் நிறுவனத்திற்கு உறுதியளித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தில் தற்போது இருக்கக் கூடிய 18 வயதுக்கும் குறைவான சிறார்களை உடனடியாக விடுவித்து அவர்களது புனர்வாழ்விற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக உறதியளித்துள்ளது.

இது சம்பந்தமாக எதிர்வரும் 3 மாதங்களுள் திட்டமிட்ட அடிப்படையில் விடயங்களை செயற்படுத்த உள்ளதாக இலங்கை புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் சுகத கமலத், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பாக பாரளுமன்ற உறுப்பினர் முரலிதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் யுனிசெப் சார்பாக அவ்வமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பிலீப் டவுமலே ஆகியோர் கையொப்படமிட்டனர்.

No comments:

Post a Comment