Tuesday, December 30, 2008

நச்சுவாயுவினால் மூவர் மரணம் காவத்தையில் மாணிக்கக்கல் அகழ்வு தொழிலாளருக்கு நேர்ந்த பரிதாபம்

காவத்தை நீலகம கிராமத்தில் மாணிக்க கல் அகழ்வுக்குச் சென்ற மூன்று குடும்பஸ்தர்கள் பலியா கியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

35 அடி ஆழத்தில் அகழ்வுக்காக இறங்கியிருந்த போது எரிவாயு தோன்றியதால் மூச்சுத் திணறி அவர்கள் இறந்துள்ளனர். எம். ரத்னம் - வயது 65 எம். மருதவீரன் (தருமா) - வயது 39 சோழகுப்பன் (கணேஷ்) - வயது 38 ஆகிய மூவரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com