Tuesday, December 16, 2008

இலுப்பைக் கடவையில் நேற்று பொலிஸ் நிலையம் திறப்பு



புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றப்பட்ட மன்னாருக்கும் விடத் தல் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள இலுப்பைக் கடவையில் நேற்று புதிய பொலிஸ் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் தினங்களில் முழங்காவில், பூநகரி கபுவத்தை ஆகிய பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்தும் நோக்குடன் பொலிஸ் நிலையங்களை ஆரம்பிக்க பொலிஸ் தலைமையகம் திட்டமிட்டுள்ளது. மீட்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் 22 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதோடு இதுவரை சிலாபத்துறை, மடு, விடத்தல்தீவு ஆகிய பகுதிகளில் பொலிஸ் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பகுதிகளில் பொலிஸ் நிலயங்களுக்கென 10 ஆயிரம் பொலிஸாரை புதிதாக நியமிக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com