புலம்பெயர்ந்து வாழுந்து கொண்டு இலங்கை அரச ஓய்வூதியம் பெறுவோர் தம்மை மீள் பதிவு செய்யவேண்டும்.
தவறும் பட்சத்தில் எதிர்வரும் ஜனவரியிருந்து ஓய்வூதியம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
புலம்பெயர்ந்து வாழும் ஓய்வூதியம் பெறும் இலங்கையர்கள் தமது தற்போதைய தரவுகளை ஓய்வுதிய திணைக்களத்திற்கு வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவர்களது கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுப்படும் எனவும் ஒய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஓய்வூதியத்திணைக்களத்தின் இயக்குனர் கே.ஏ.திலகரட்னா ஓய்வுதியம் பெறும் 25000 பேர் இலங்கைக்கு வெளியே வாழ்வதாகவும் அவர்களில் 18000 பேருக்கு மேற்பட்டோர் அவுஸ்திரேலியா, இந்தியா, லண்டன், அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வாழ்வதாகவும் இவர்களுக்காக அராசாங்கம் வருடாந்தம் 5 கோடி ருபாக்களை செலவிடுவாதாகவும் கூறியுள்ளார்.
மேற்படி நபர்களில் 20000 இற்கு மேற்பட்டடோர் கொமர்சியல் வங்கியூடாக தமது ஓய்வூதியத்தை பெற்றுவருவதாகவும் அவர்கள் இக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள இணை வங்கிக்கணக்குகளை வைத்திருப்பதாகவும் அதன் மூலம் மோசடிகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ள அவர் ஓய்வுதியக்காரர்கள் தாம் உயிர்வாழ்வதை உறுதிப்படுத்து சாட்சிப்பத்திரத்தை ஒர் சட்டத்தரணி ஊடாக அல்லது தாம் வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக அத்தாட்சிப்படுத்துமாறு வேண்டப்பட்டுள்ள போதிலும் வங்கி உத்தியோகித்தர்கள் இதை நடைமுறைப்படுத்துவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அங்கு மோசடிகள் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஓய்வூதியக்காரர்களின் இன்றைய சுயவிபரங்களைக்கோரும் படிவம் அவர்ட்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு பதிலளிக்காத ஓய்வூதியக்காரர்களின் கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment