இறந்த படையினரை கௌரவிக்குமுகமாக இடம்பெறும் நிகழ்வுகளின் நாட்டின் ஜனாதிபதி.
தேசிய தலைவரால் முடியுமா போராளிகளின் குடும்பங்களைச் சந்திக்க?
இராணுவ சிங்க ரெஜிமெண்ட் படையில் தாய் நாட்டுக்காகப் போராடி உயிர் நீத்த படை வீரர்களை நினைவுகூரும் வருடாந்த நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அம்பேபுஸ்ஸ இராணுவ ரெஜிமெண்ட் படை முகாமில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி உயிரைப் பணயம் வைத்து நாட்டைக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினரைப் பலவீனப்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயற்படு கின்றன. இதனால், படையினரின் வெற்றிகரமான முன்னேற்றம் ஒருபோதும் பின்னடைவு காணப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுசையில் தாய் நாட்டுக்காகப் போராடும் படை வீரர்களை நாம் சாதாரணமாக மதிப்பிடுவதில்லை. அவர்கள் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களாவர். சுதந்திரத்தின் பங்காளர்களாகவே அவர்களைப் பார்க்கிறோம்.
இந்த வகையில் நாட்டின் இறைமை, சுயாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் அவர்களுக்கு எம் அனைவரினதும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். நாட்டுக்காக உயிர் நீத்த படைகளுக்கு எமது அஞ்சலிகள்.
பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment