நாட்டை விட்டு வெளியேறுமாறு சிவாஜிலிங்கத்துக்கு இந்தியா உத்தரவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்திய மத்திய அரசாங்கம் உத்தர விட்டுள்ளதாக "ட்ரான்ஸ்கரண்ட்" செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய 72 மணி நேரத்திற்குள் சுயமாக வெளி யேற வேண்டும். தவறினால் இந்திய அதிகாரிகளால் பலவந்தமாக நாடு கடத்தப்படுவாரென அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதா கவும் அந்தச் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய மண்ணில் வைத்து இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இந்த உத்தரவை அடுத்து புதுடில்லி ஜவகர்லால் பல்கலை க்கழக விடுதியில் தங்கியிருந்த சிவாஜி லிங்கம் உடனடியாக சென்னைக்கு திரும்பி யுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வை. கோபாலசாமியின் தலைமையில் சென் னையில் இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரத்தின் முன்னால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஆர்ப்பாட்டத்தின் போது சிவாஜிலிங்கம் அதில் பங்கேற்றிருந்தார். அதேநேரம், தமிழீத்திற்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகளுக்கும் ஆதரவாகக் கோஷமிட்டிருந்தார். தமிழ் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து, தமிழகத்தில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்த முயல்கிறாரென இந்திய பாதுகாப்பு தரப்பு சிவாஜிலிங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறது.
அதேநேரம் சிவாஜிலிங்கம் இந்தியாவில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ் ஈழத்திற்கும் புலிகளுக்கும் ஆதரவு திரட்ட முயன்று வருகிறார். இலங்கை போன்ற ஒரு நட்பு நாடொன்றிற்கு இந்திய மண்ணில் இருந்து கொண்டு அபகீர்த்தி ஏற்படுத்துவதோடு உள்நாட்டு அரசியலிலும் இவர் தலையீடு செய்ய முயல்கிறாரென இந்திய பாதுகாப்புத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளதாக "ட்ரான்ஸ்கரண்ட்" செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
சிவாஜிலிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு எம்.பியாகத் தெரிவுசெய்யப்பட்டவர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர். தமிழீழ ஆதரவாளரான எம். கே. ஈழவேந்தன் இந் தியாவிலிருந்து இரவோடு இரவாக நாடு கடத்தப்பட்டிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளுக்கு ஆதரவாக தமிழ் நாட்டிலிருந்து செயற்பட்டாரென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டிருந்தார்.
தினகரன்
0 comments :
Post a Comment