திருமுறிகண்டி சந்தி படையினர் வசம்.
புலிகளின் பிரதான வழங்கல் பாதைகளான ஏ9 யும் ஏ32 யும் சந்திக்கின்ற திருமுறிகண்டி சந்தி நேற்று முன்தினம் பின்நேரம் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். வன்னி மீட்பு நடவடிக்கiயில் ஈடுபட்டுள்ள 57ம் படைப்பிரிவினர் கொக்காவில் வடக்கிலிருந்தும் அக்கராயன்குளம் கிழக்கிலிருந்தும் முன்னேறி இரணமடுவிற்கு தெற்கே 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள திருமுருகண்டி சந்தியை அடைந்துள்ளனர்.
புலிகளின் வழங்கல் பாதையின் மிகவும் முக்கியமான இச்சந்தியை தக்கவைத்துக்கொள்வதற்காக இருமுனையிலிருந்து முன்னேறிய படையினர் மீது புலிகள் பலத்த எதிர்ப்பை காட்டியிருந்தனர். இறுதியில் படையினரின் தங்திரோபாயங்களுக்க முகம்கொடுக்க முடியாத புலிகள் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கி உள்ளனர். புலிகளின் தொலைத்தொடர்புகளை இடைமறித்து கேட்டபோது இத்தாக்குதலில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டமை உறுதியாகியுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கேந்திர முக்கியத்துவம் மிக்க சந்தி படையினரிடம் வீழ்ந்துள்ளதன் மூலம் வவுனியாவில் இருந்து ஏ9 பாதையூடாக படையயினருக்கான வழங்கல் பாதைகள் மிக இலகுவாகின்றது.
0 comments :
Post a Comment