Tuesday, December 16, 2008

திருக்கோயில் வினாயகபுரம் பிரதேசத்தில் புலி உறுப்பினர் சயனைட் அருந்தி தற்கொலை.



தொடர் தோல்விகளை சந்தித்துவரும் புலித்தலைமை காடுகளில் முடங்கியுள்ள புலிகளுக்கு தொடர் அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. கடந்த காலங்களில் கஞ்சிகுடிச்சாற்று காடுகளில் முடங்கியுள்ள புலிகள் மீது பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தம் அவர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாண நிலமைகள் சீர்குலைக்க முனையும் புலிகள் தொடர்சியாக கொல்லப்பட்டு வருகின்றனர். அதன் வரிசையில் இன்று திருக்கோயில் வினாயகபுரம் பிரதேசத்தினுள் நுழைந்த புலிகளியக்க உறுப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவரை சுற்றி வளைத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்த போதும் நம்பிக்கையீனமாக சயனைட்டை உட்கொண்ட அவரை பல முதலுதவிகள் செய்து காப்பற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்காமல் போய்விட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் இனியபாரதி தெரிவித்தார்.

தங்கன் என இனம் காணப்பட்டுள்ள வடபிரதேசத்தை சேர்ந்த மேற்படி புலிகளியக்க உறுப்பினர் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க காரியாலயமொன்றை தாக்க சென்று அங்கு ரிஎம்விபி யினர் திருப்பி தாக்கிய போது தனது மைக்ரோ ரக கைத்துப்பாக்கியையும் விட்டு விட்டு ஓடி ஒழிந்திருந்தார் என தெரியவருகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com