Saturday, December 27, 2008

பிரபாகரனின் பகுங்குமிடம் மீது விமானத்தாக்குதல்.




முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்குமிடம் மீது சிறிலங்கா விமானப்படையினர் தாக்குதல் நாடாத்தியுள்ளனர். இது சம்பந்தமாக ரொய்டருக்கு தகவல் தெரிவித்துள்ள விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக்க நாணயக்கார பிரபாகரனது இருப்பிடம் மீது நாடாத்தப்பட்ட தாக்குதல் மிகவும் நம்பிக்கையான தவல்களின் அடிப்படையில் இடம்பெற்றதெனவும், விமானப்படையினர் அதன் இலக்கை தவறாமல் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் சேதவிபரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு தாக்குதல் வன்னியில் இடம்பெற்றுள்ளதென்பதை ஏற்றுள்ள புலிகள் அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றபோதிலும் புலிகளின் தலைவர் உட்பட தளபதிகளின் பகுங்குமிடங்கள் பற்றிய தகவல்களை இராணுவத்தினர் துல்லியமாக அறிந்து வைத்துள்ளதன் மூலமே தமிழ் செல்வனை இலக்கு தவறாமல் கொன்றொழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment