புலிகளின் புதிய யுக்தி. வயோதிபர்கள் சிகிச்சைபெற வவுனியா செல்லவேண்டுமாயின் பாதணியுள் வெடிமருந்து கொண்டு செல்லவேண்டுமாம்.
நேற்று காலை 10 மணியளவில் ஓமந்தை சோதனைச்சாவடியில் வீதிக்காவலில் ஈடுபட்டிருந்து இராணுவத்தினர் பாதணிஜோடிகள் இரண்டினுள் துல்லியமாக மறைத்து கடத்தப்படவிருந்த வெடிமருந்துகளை மீட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து வவுனியா வந்த வயோதிபர் ஒருவர் எடுத்து வந்த பாதணிகளை சோதனை செய்த இராணுவத்தினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிராம் சி4 ரக வெடிபொருளை மீட்டுள்ளனர்.
அவ்வெடிமருந்தை சிறு சிறு தொகுதிகளாக கடந்த முற்பட்ட வயோதிபர் தான் வவுனியா வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சை நிமித்தம் வந்துள்ளதாகவும் புலிகள் இவற்றை நிபந்தனையின் அடிப்படையில் அவரிடம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தமது விசாரணைகளை முடித்த படையினர் வயோதிபரை மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிசாரிடம் பாரம்கொடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment