Tuesday, December 9, 2008

வன்னியில் எஞ்சியுள்ள புலிகளைச் சரணடையுமாறு வேண்டகோள் விடுக்கும் படையினர்.



இலங்கையில் பயங்கரவாதத்தை ஓழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட வன்னி படைநடவடிக்கைகளின் ஊடாக புலிகளின் வன்பிடியில் இருந்த மூன்றில் இரண்டு பங்கு நிலப்பகுதியை மீட்டுள்ள படையினர் அங்கு எஞ்சியிருக்கக்கூடிய புலிகளை சரணடையுமாறு வேண்டுகின்றனர். படையினர் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கையின் முழநிலப்பரப்பையும் எமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் நோக்குடன் ஆரம்பித்திருக்கும் இந்நடவடிக்கையில் புலிகளின் தலைமை தோற்கும் என்பது திண்ணம். இதை உணர்ந்தவர்களான பல போராளிகள் எம்மிடம் சரண அடைந்துள்ளனர். அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று காலை 08.12.2008 கலை 08 மணியளவில் எம்மிடம் சரணடைந்த 30, 26, 25 வயதுகளைக் கொண்ட போராளிகள் இன்று புலிகள் எதர்நோக்கி நிற்கின்ற இக்கட்டான சூழ்நிலையையும் அங்குள்ள போராளிகள் எம்மிடம் சரணடைய எதிர்பார்த்திருப்பதையும் விளக்கமாக கூறியுள்ளனர்.

மேற்படி அவர்களின் மனக்குமுறல்களை வைத்து மேலும் ஒருமுறை எஞ்சியிருக்கும் போராளிகளுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில் கண்டி யாழ்பாண வீதியான ஏ9 பாதையின் மேற்குப்புறமாக நாம் நிலைகொண்டுள்ளோம். நீங்கள் புலிகளது தடையை உடைத்து உடனடியாக அருகில் உள்ள இராணுவமுகாமிலோ அன்றி சோதனைச்சாவடியிலோ சரணடையுங்கள். உங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமுகமாக பல செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. என அவ்வேண்டுகொள் தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com