கஞ்சிகுடிச்சாற்றில் புலிகளின் உள்வீட்டு பிணக்கு வலுக்கின்றது.
ஆம்பாறை கஞ்சுகடிச்சாற்று காட்டுப்பகுதியில் ஆங்காங்கே பதுங்கியிருக்கும் புலிகளின் தளபதிகளிடையேயான உள்வீட்டு தகராறுகள் வலுப்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளின் அம்பாறை மாவட்ட இராணுவத்தளபதியான கேணல் ராம் இற்கும் கஞ்சிகுடிச்சாற்று பிரதேச தளபதியான நகுலனிற்கும் இடையிலான முரன்பாடுகள் முற்றியிருப்பதாக தெரியவருகின்றது.
இவ்விருவரிடையே நிலவும் அதிகார போட்டியினால் அங்குள்ள போராளிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் ஜால பிரதேசத்தை அண்டிய காடுகளில் நிலைகொண்டுள்ள ராம் கஞ்சிகுடிச்சாற்றில் நகுலனின் தலைமையில் இயங்குகின்ற போராளிகளுக்கு நேரடியாக உத்தரவுகளை வழங்குகின்றபோது அங்கு நடைமுறைச் சிக்கல்களை நகுலன் எதிர்நோக்குவதாக அவரது ஆதரவாளர்களான போராளிகள் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறாயினும் விடயம் தலைமைப் பீடத்திற்கு சென்றுள்ளதாகவும் இந்நிலைமைகளை தணிக்கு முகமாக இவ்விருவரில் ஒருவர் உடனடியாக அம்பாiறைக்கு வெளியே எடுக்கப்பட்டு வன்னியில் அல்லது மட்டு மாவட்ட காடுகளில் முடக்கப்படுவர் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment