Saturday, December 6, 2008

புளியங்குளத்தில் புதிய சோதனைச்சாவடி திறப்பு.



கடந்த வார சண்டைகளைத் தொடர்ந்து புளியங்குளம் பகுதியை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்த படையினர் புலிகளின் கப்பம் வாங்கும் பிரதான பாதையாக விளங்கிய ஏ9 விதியின் 8.5 கிலோமீற்றர் பகுதியையும் புலிகளின் பிடியில் இருந்து மீட்டிருந்தனர். நேற்று கைப்பற்றப்பட்ட புளியங்குளம் நகரப்பகுதியடங்கிய ஏ9 பாதையில் தமது பிரதான சோதனைச்சாவடியை அமைத்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் ஓமந்தைச்சாவடியில் இடம்பெற்ற சகல பாதுகாப்பு நடவடிக்ககளும் புளியங்குளம் சோதனச்சாவடியிலேயே இடம் பெறும் என தெரியவருகின்றது. இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து புலிகளின் பிரதேசங்களுள் நுழைவதற்கான இறுதி சோதனை சாவடியாக ஓமந்ததை சோதனை சாவடி இருந்து வந்த நிலையிலேயே புளியங்குளம் சோதனைச்சாவடி திறக்கப்பட்டடுள்ளது. இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட சகல் அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை ஓமந்தைக்கு பதிலாக புளியங்குளம் பிரதேசத்திலேயே மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com