Friday, December 5, 2008

புலிகளின் வன்பிடியை உடைத்து யாழ் நோக்கி செல்லும் வன்னி மக்கள்.

வன்னியில் புலிகள் படுதோல்வியை சந்தித்துவரும் நிலையில் அதன் சுமைகளை வன்னி மக்கள் மீது சுமத்தி வருகின்றனர். இவற்றை தாங்கமுடியாத வன்னிமக்கள் தமது உயிரை பணயம் வைத்து புலிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்று வவுனியா ஓமந்தை இராணுவச்சாவடியில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

தற்போது இந்நிலைமை வன்னியின் வட பிரதேசங்களிலும் ஆரம்பமாகி உள்ளது. சுண்டிக்குளம் பிரதேசத்தில் இருந்து புலிகளின் தடையை உடைத்துக்கொண்டு வள்ளமொன்றில் 23 பொது மக்கள் யாழ் படையினரிடம் பாதுகாப்புத்தேடிச் சென்றுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை இவ்வள்ளத்தில் பாதுகாப்புத் தேடி வந்த 4 குழந்தைகள் 8 பெண்கள் மற்றும் 11 ஆண்களை பரித்தித்துறை கடற்படைத்தளத்திற்கு 6 கடல்மைல் தொலைவில் மீட்ட கடற்படையினர் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment