புலிகளை இராணுவரீதியில் தோக்கடிக்க வேண்டும். யுத்த நிறுத்தத்திற்கு இது தருணமல்ல என்கின்றது ஐ.தே.க
புலிகள் இயக்கத்தினருடன் யுத்தநிறுத்தத்மொன்றிற்கு செல்லும் திட்டம் அரசிற்கு இருக்குமானால் அதை கைவிட்டு அவர்களை இராணுவரீதியாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.
நேற்று அவசரகாலச் சட்டத்தினை ஒருமாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் பரராளுமன்றத்தில் பேசிய ஐ.தே.க கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் செனவிரட்ன மேற்படி கோரிக்கையை விவாதத்தின்போது முன்வைத்தார்.
அங்கு தொடந்து உரையாற்றிய எம்.பி.லக்ஷ்மன் செனவிரட்ன பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக அதிகார பகிர்வு மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அன்று பயங்கரவாதிகளாக இருந்த கருணா அம்மான், பிள்ளையான், விமல் வீரவன்ச போன்றோர் இப்போது கௌரவமானவர்களாக அழைக்கப்படுகிறார்கள். இதேபோல் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் முடிந்தால் கொண்டு வாருங்கள். ஆனால் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும். யுத்த நிறுத்தத்திற்கு அரசாங்கம் செல்லக்கூடாது. இதுவெ ஐ.தே.க யின் நிலைப்பாடு என்றார்.
இத்தருணத்தில் அங்கு பேசிய அக்கட்சியின் முத்த உறுப்பினரும் ஐ.தே.க. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமர்ன ஜோன் அமரதுங்க மேற்படி தமது நிலைப்பாட்டின் நிமித்தம் பயங்கரவாதம் இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் தேவை கருதி பாதுகாப்பு செலவுக்கான நிதியொதுக்கீட்டுக்கு ஐ.தே.க ஆதரவளிப்பதாகவும் நேற்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment