Wednesday, December 3, 2008

சம்பவத்தில் அல்காய்தா அமைப்புக்குத் தொடர்பிருக்கலாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ்



பயங்கரவாதிகளைப் பிடிக்க பாகிஸ்தான் உதவ வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வலியுறுத்தினார்.

மும்பை தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரஸ்ஸல்ஸிலிருந்து புதன்கிழமை காலை காண்டலீசா ரைஸ் புது தில்லி வந்தார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அல்லிகாய்தா அமைப்புக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தை மறுப்பதற்கில்லை என்று கூறினார். அவர் மேலும் கூறியது:

இந்தியாவும் அமெரிக்காவும் ஓன்றிணைந்து புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம்தான் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க முடியும்.

மும்பையில் நடைபெற்ற தாக்குதல் மீண்டும் தொடராமல் இருக்க வேண்டுமானால் பிற நாடுகள் இந்தியாவுக்குத் தேவையான ஓத்துழைப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த விஷயத்தில் இமெரிக்காவின் முழு ஓத்துழைப்பு இந்தியாவுக்கு உண்டு என்பதை உணர்த்தவே தான் பயணம் மேற்கொண்டதாக அவர் கூறினார். தேவைப்பட்டால் தடயவியல் சோதனை மூலம் இதில் தொடர்புடைய கும்பலைக் கண்டுபிடிக்க உதவத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு மிகுந்த அனுபவம் உண்டு என்று குறிப்பிட்ட அவர், நியூயார்க்கில் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

பயங்கரவாதிகளுக்குக் கிடைக்கும் நிதி உதவியைக் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே அவர்களுக்குக் கிடைக்கும் நிதி உதவியின் ஆரம்ப நிலையைக் கண்டறிந்து அதை நிறுத்த வேண்டும்.

இதேபோல மும்பை தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக செயல்பட வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதன் மூலம்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் தடுக்க முடியும்.
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசு திறந்த மனதுடன் உடனடியாக செயலாற்ற வேண்டும். அப்போதுதான் தீவிரவாதத்தை ஓடுக்குவதில் அந்நாட்டு அரசு மிகுந்த பொறுப்போடு செயல்படுகிறது என்பது உலக நாடுகளுக்குத் தெரிய வரும்.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஓப்படைக்க வேண்டும் ஏன இந்தியா விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று செயல்படுவதன் மூலமே பாகிஸ்தான் பற்றிய யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்றார் ரைஸ்.

பிரதமருடன் சந்திப்பு: முன்னதாக புதன்கிழமை காலை தில்லி வந்த காண்டலீசா ரைஸ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் இலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். பின்னர் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடனும் 20 நிமிஷம் இலோசனை நடத்தினார்.

தில்லியிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானுக்கு பயணமாகிறார் ரைஸ். வியாழக்கிழமை இஸ்லாமாபாதில் அதிபர் ஜர்தாரி, வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளார்.

அமெரிக்காவின் கூட்டு ராணுவ தளபதி அட்மிரல் முல்லென் ஏற்கெனவே இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார். அவர் வியாழக்கிழமை அந்தியா வந்து இங்குள்ள அதிகாரிகளுடன் பேச உள்ளார்.

நன்றி தினமணி

No comments:

Post a Comment