Tuesday, December 2, 2008

பாக்கிஸ்தான் ஆயுதக்குழக்களின் தலைவர்களை ஒப்படைக்க கோருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி



மும்பாய் தாக்குதல்ளைத் திட்டமிட்ட மற்றும் தாக்குதல் நாடாத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆயுதக்குழுக்களின் பெயர்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இது விடயமாக கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்குதல் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளில் கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளைக் ஆதாரங்களாக கொண்டு இச்சம்பவத்துடன் தொட்ர்பு கொண்டுள்ளார்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதக்குழக்களின் பெயர்களை வெளியிட்டுள்ளதுடன் அவற்றின் தவைர்கள் முக்கியஸ்தர்ளை பாக்கிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2001 ம் ஆண்டு இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சம்பந்தப்பட்டோர் பற்றிய விபரங்களை வெளியட்ட இந்திய அரசு அவை சம்பந்தமான நடவடிக்கைகளை பாக்கிஸ்தான் அரசை கோரியிருந்ததாகவும் இதுவரை காலமும் அது சம்பந்தமாக அவ்வரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்:

No comments:

Post a Comment