Sunday, November 30, 2008

இலங்கையில் பெண்களுக்கு எதிரான அநீதி அதிகரிப்பு



இலங்கையில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அண்மையில் ஐ.நா. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஆண்களுக்கு நிகராகக் கல்வியும், சுகாதார வசதியும் பெண்களுக்கும் அளிக்கப்படுகிறது. இலங்கையில் பெரும்பாலான பெண்கள் நன்கு கல்வியறிவு பெற்றவர்களாகவே உள்ளனர். எனினும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி மட்டும் தவிர்க்க முடியாததாக இருந்து வருவதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அந்தவகையில், நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் மாதத்துக்கு 8,000 முதல் 10,000 வரையிலான வழக்குகள் பெண்களுக்கு எதிரான அநீதி தொடர்பாகப் பதிவாகின்றன.

ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே போர் நடக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள சுனாமி முகாம்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்துள்ள பெண்கள் அதிகமான பிரச்னையை சந்திக்க வேண்டியுள்ளது ஏன்பதும் ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தடுக்கும் விதத்தில் ஏராளமான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இனால், இந்தச் சட்டங்களால் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. ஆவை இருந்தும் பயனற்றவையாகவே உள்ளன ஏன்று இலங்கைக்கான ஐ.நா.வின் பிரதிநிதி கிறிஸ்டியன்சென் குற்றம்சாட்டினார்.

No comments:

Post a Comment