சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மாதாந்த அறிக்கை: 95 சடலங்கள் ஓமந்தை ஊடாக பரிமாறப்பட்டதாம்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்குமிடையில் வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களில் இரு பக்கத்திலும் கொல்லப்பட்ட 95 பேருடைய சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பரிமாறியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அவ்வறிக்கை 445 நோயாளிகள் வன்னிப்பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வவுனியா அழைத்துவரப்பட்டதாக தெரிவப்பதுடன் ஒமந்தை சோதனைச்சாவடி ஊடாக பயணித்த பொதுமக்களின் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையையும் பிற தரவுகளையும் விலாவாரியாக தெரிவிக்கின்றது. ஆனால் பரிமாறப்பட்ட 95 சடலங்களில் எத்தனை புலிகளுடையதும் படையினருடையதும் என கூற தயங்குகின்றனர்.
0 comments :
Post a Comment