வத்தளை தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் பலி, 17 காயம். முகாம் பொறுப்பதிகாரி பலி.
இன்று காலை 8.30 மணியளவில் வத்தளை பள்ளியாவத்தை சிவில் பாதுகாப்பு படையினரது முகாம் முன்பாக இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இரு பொதுமக்கள் ஒரு இராணுவ அதிகாரி 5 சிவில் பாதுகாப்புப் படையனர் என 8 பேர் கொல்லப்பட்டும் 4 பொதுமக்கள் 13 சிவில் பாதுகாப்பு படையினர் என 17 பேர் காயமடைந்துமுள்ளதாக தெரியவருகின்றது.
இத்தாக்குதல் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பு நீர்கொழும்பு பாதையில் தற்போது சிவில் பாதுகாப்புப் படையினரே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். சிவில் பாதுகாப்பு படையினரின் பரக் எனப்படும் தங்குமிடமே மேற்படி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அங்கு சுமார் 60 - 80 பேர் ஓய்வு பெறுவதும் தயார் நிலையில் இருப்பதும் வழக்கம். இவ்முகாமில் இலங்கை இராணுவத்தில் கப்டன் தர அதிகாரி ஒருவர் கடமையில் இருப்பார்.
மேற்படி முகாமினுள் நுழைந்து பாரியதோர் உயிர்சேதத்தை ஏற்படுத்துமுகமாக தற்கொலைதாரி உள்செல்ல முற்பட்டபோது அவர் அதன் வாயிலில் கடமையில் இருந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அவர் மீது சந்தேகம் கொண்ட சிவில் படை அதிகாரிகள் கடமையில் இருந்த இராணுவக் கப்டனுக்கு தகவல் வழங்கியுள்ளனர். கப்டன் அங்கு விரைந்த போது நிலமை மோசமானதை உணர்ந்த தற்கொலைதாரி அவ்விடத்திலேலே வெடித்து சிதறியுள்ளார். கப்டன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.
0 comments :
Post a Comment