டிச. 28: சென்னையில் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் நடத்திய கல்வித்துறை ஊழியர்கள் இருவர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்த விவரம்:
பெரம்பூரைச் சேர்ந்தவர் சுகுமார் (50) மேற்கு கே.கே. நகரை சேர்ந்தவர் ஜஸ்டஸ் இபிரஹாம் (38). இருவரும் சென்னையில் மெட்ரிகுலேஷன் கல்வித்துறை ஆய்வாளர் அலுவலக ஊழியர்கள்.
இவர்கள் இருவரும் சென்னை எழும்புரில் உள்ள ஓரு ஹோட்டலில் பாலியல் நடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீசாரும் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீஸாரும் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஹோட்டல் அறையில் 15 வயது சிறுமி ஒருவரையும் 19 வயது பெண்ணையும் வலுக்கட்டாயமாக இவர்கள் பாலியல் தொழிலில் உட்படுத்தியது தெரிந்தது.
சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் உட்படுத்த முயன்றது தொடர்பாக சுகுமார் ஜஸ்டஸ் இபிரஹாம் ஆகியோரை கைது செய்தனர். ஹோட்டல் மேலாளர் சந்தோஷ்குமார் (45) தரகராக செயல்பட்டுவந்த பெரியசாமி (30) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
நன்றி: தினமணி.
No comments:
Post a Comment