படையினரின் சினைப்பர் தாக்குதலில் 4 புலிகள் பலி.
முல்லைத்தீவு பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற கொமாண்டோ அணியின் 1ம் பிரிவினர் நேற்று (டிச 12) அடம்பன் பிரதேசத்தில் முன்னரங்குகளில் காணப்பட்ட 3 புலிகளையும் நெவில் பிரதேசத்தில் 1 புலி உறுப்பினரையும் ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் கொன்றுள்ளாதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் அப்பகுதியில் செயல்படுகின்ற படையினர் தமது இலக்குகளை நோக்கி முன்னேறி புலிகளுக்கு பலத்த சேதத்தை உருவாக்கி வருவதகாவும் தெரிவித்துள்ளனர். மேற்படி விடயங்களை புலிகளது தொடர்புசாதனங்கள் ஊர்ஜிதப்படுத்தி உள்ளதாக அச்செய்தி மேலும் குறிப்பிடுகின்றது.
0 comments :
Post a Comment