Wednesday, December 24, 2008

புலிகளின் 3வது விமான ஓடுபாதை படையினர் வசம்.



இன்று நண்பகல் முல்லைத்தீவ அம்பகாமம் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளின் 25 மீற்றர் அகலமானதும் 350 மீற்றர் நீளமானதுமான விமான ஓடுபாதையை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

இது படையினரின் பிடியில் வீழ்ந்துள்ள 3வது விமான ஓடுதளம் என பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 30ம் திகதி செப்டம்பர் மாதம் 2008ம் ஆண்டு பனிக்கன்குளம் பகுதியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த படையினர் அங்கு புலிகளின் 500 மீற்றர் நீளமான ஓடு பாதையை முதலாவதாகவும், 20ம் திகதி கார்திகை மாதம் 2008ம் திகதி பூநகரி பரந்தன் பாதையை கைப்பற்றய படையினர் அங்கு புலிகளின் இரண்டாவது விமான ஓடுபாதையையும் கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment