மேலும் 37 பொதுமக்கள் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில்.
நேற்று சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் புலிகளின் வன்பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒட்டியாமலைப் பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள இராணுவத்தினரிடம் தஞ்சம் கோரியுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலும் 6 பொதுமக்கள் நேற்று மாலை 6.00 மணியளவில் அண்மையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்ட நெடுக்கேணிப் பிரதேசங்களுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்பு இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment