வடக்கு, கிழக்கு மருத்துவமனைகளுக்கு 350 மருத்துவர்கள் புதிதாக நியமனம் இருவாரங்களில் கடமை பொறுப்பேற்பு
புதிதாக நியமனம் பெற்ற 350 மருத்துவர்கள் எதிர்வரும் 2 வாரங்களில் வடக்கு கிழக்கு மருத்துவமனைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று கூறியது. இவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் உள்ளகப் பயிற்சிகளில் ஈடுபட உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க உப செயலாளர் உபுல் குணசேகர கூறினார்.
நாவற்காடு ஆஸ்பத்திரி மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்த சிங்கள மருத்துவர்கள் ஆஸ்பத்திகளில் இருந்து வெளியேறினர். அவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியதையடுத்து சகல மருத்துவர்களும் மீண்டும் கடமைக்குத் திரும்பியுள்ளனர்.
உள்ளக பயற்சிக்காகச் செல்லும் மருத்துவர்களுக்கும் போதிய பாதுகாப்பு மற் றும் வசதிகள் வழங்க சுகாதார அமைச்சு உறுதியளித்துள் ளதாகவும் இதனையடுத்து எதிர்வரும் இரண்டு வாரங் களுக்குள் அவர்கள் கடமைக்குத் திரும்ப உள்ளதாகவும் உபுல் குணசேகர கூறினார். வடக்கு கிழக்கு ஆஸ்பத்திரிகளுக்கு 350 மருத்துவர்களும் கடமைக்குச் செல்வதன் மூலம் அங்கு நிலவும் மருத்துவர் தட்டுப்பாடு பெருமளவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment