Friday, December 5, 2008

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 பாராளுமன்ற உறுப்பனர்களுக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு.

கடந்த 2006 ஜேர்மனியில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் இலங்கையின் இறையாண்மையைக்கும் அதன் யாப்பிற்கும் எதிரான கருத்தக்களை வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 பாராளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இம்மூவரும் கடந்த காலங்காலங்களில் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அங்கு அவர்களிடம் புலிகளை நீங்கள் ஏக பிரதிநிதிகள் என கூறியிருந்தீர்களா? தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனா? ஏன்கின்ற கேள்விகளும் அவர்களிடம் கேட்கப்பட்டிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment