புலிகள் 25 படையினரது உடல்கள் கையளித்ததாக வெளியிட்ட செய்தியை ஐசிஆர்சி மறுதலிக்கின்றது.
இன்றும் நேற்றும் இடம்பெற்ற மோதல்களில் படையினரின் பல உடலங்களைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்திருக்கும் புலிகள் அவற்றில் 25 உடலங்களை ஐசிஆர்சி யினரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இச் செய்தி தொடர்பாக கொழும்பைத் தளமாக கொண்ட இணையம் ஒன்று செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வினவியபோது அச்செய்தியை மறுதலித்துள்ள ஐசிஆர்சி அதிகாரி நேற்று 16ம் திகதி தாம் 2 சடலங்களை படைத்தரப்பினரிடம் கையளித்ததாகவும் இன்று 17ம் திகதி 4 சடலங்களை புலிகளிடம் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment