Thursday, November 20, 2008

தமது கட்சி முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கின்றது - TMVP

தமது கட்சி முக்கியஸ்தர்களினதும் உறுப்பினர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அது தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும் எனவும் TMVP கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இடம் பெற்ற சில் சம்பங்களை வைத்துப் பார்க்கும் போது தமது கட்சி முக்கியஸ்தர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பல்வேறு ஆயுதத்தரப்பினாலும் அச்சுறுத்தல் இருப்பதனால் இப்பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் தாம் கூடிய கவனம் செலுத்துவதாகவும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com