இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் மற்றும் அமைச்சின் ஆலோசகர் நாராயணன் அவர்களும் பதவி துறப்பு.
அண்மையில் மும்பாயிலும் சிலகாலங்களுக்கு முன்னர் முக்கியமான நகரங்களிலும் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பந்தமாக எழுந்துள்ள விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தொடர்ந்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் அவர்கள் தனது ராஜினிமாக கடிதத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கட்கு அனுப்பி வைத்துள்ளார். அதை தொடர்ந்து அமைச்சின் ஆலோசகர் நாராயணன் அவர்களும் தனது ராஜினிமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதே நேற்றுக் கூட்டப்பட்ட பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் அதன் அமைச்சாரான சிவராஜ் பட்டேல் பிரசன்னமாயிருக்கவில்லை அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment