புலிகளுக்காக கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது.
இந்திய தூத்துக்குடியிலிருந்து புலிகளுக்கு பொருட்களைக் கடத்த முயன்ற நால்வர் கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, கல்மேட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நால்வரை கைது செய்து விசாரணை செய்தபோது புலிகளுக்காக கடத்தப்படவிருந்த பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கியூ பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 50 வாகன டயர்கள்,டீசல்,பெட்டரிகள், அசிட் கலன்கள் என்பனவும் கடத்தலுக்கு பயன்படுத்தபடவிருந்த மோட்டார் பொருத்திய வள்ளமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் தமிழநாடு, சேலம் அகதி முகாமில் வசிக்கும் இலங்கையர்களான
யாழ்ப்பாணம் அந்தோனி ஜெனிபர்(40),மருதங்கேணி மேகவண்ணன், கனகரத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment