Saturday, November 1, 2008

அரச நிர்வாக அதிகாரிகளுடன் கருணா அம்மான்.


இவ்வாரம் வாரம் மட்டுநகர் சென்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் எம்பியும் ரிஎம்விபி தலைவருமான கருணா பிரதேசத்தில் நான்கு நாட்கள் தங்கியிருந்து அங்குள்ள பல பிரமுகர்கள், சிவில் நிர்வாக அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர், இராணுவ - பொலிஸ் அதிகாரிகள், பாடசாலைகள் நிர்வாகத்தினர் என சகல மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்புகள் விடயமாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவியபோது எதிர்வரும் காலங்களில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக கேட்டறிந்துகொள்ளும் முகமாக இச் சந்திப்புக்கள் ஏற்பாடாகி இருந்ததென்றும் இங்கு பல புதிய விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிலவுகின்ற பிரதேசவாத பிரச்சினை முன்வைக்கப்பட்டதாகவும் அவற்றிற்கான தீர்வினை வெகு விரைவில் பேச்சுவார்த்தைகள் மூலமும் புரிந்துணர்வினை அடிப்படையாக கொண்ட அறிவுறுத்தல்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறியதுடன் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு கெடுபிடிகளினால் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எடுத்து கூறியாதாகவும் தெரிவித்தார்.

அச்சந்திப்புக்களின் போது முதலமைச்சர் பிள்ளையானை அழைத்த தலைவர் கருணா கட்சி உறுப்பினர் எவ்வாறு கட்சியின் சட்திட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என்பதை அவருக்கு எடுத்து கூறியதுடன் எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மிகவும் இறுக்கமாக்கப்பட இருப்பதையும் அவருக்கு தெரியப்படுத்தியிருந்ததுடன் பிள்ளையானது இணைப்புச் செயலாளரான அசாத்மௌலான பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருந்த கருத்துக்கு விளக்கத்தையும் கோரியிருந்தார் எனவும் பெயர் குறிப்பிடவிரும்பாத ரிஎம்விபி உறுப்பினர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

ரிஎம்விபி தலைவர் கருணா பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன்.

ரிஎம்விபி தலைவர் கருணா பொலிஸ் - விஷேட அதிரடிப்படை அதிகாரிகளுடன்.

ரிஎம்விபி தலைவர் கருணா முக்கிய உறுப்பினர்கள் சிலருடன்.

ரிஎம்விபி தலைவர் கருணா அரச அதிகாரிகளுடன்.

ரிஎம்விபி தலைவர் கருணா நகரபிதா சங்கீதா மற்றும் சபை உறுப்பினர்களுடன்.



No comments:

Post a Comment