பொதுத்தேர்தலொன்றை நடத்தாமல் கருத்துக்கணிப்பொன்றை நடத்துவது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கபடுகிறது.
2010ஆம் ஆண்டுக்கு முன்னர் கருத்துக் கணிப்பொன்றை நடத்தி 2004ஆம்ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பது பற்றி அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கபடுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம், 1983ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்தாமல் கருத்துக் கணிப்பை நடத்தி 1989ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தை அதிகரித்திருந்தது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் இத்திட்டத்தை முன்னெடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment