சப்ரகமுவ ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மொகான் சாலிய எல்லாவெல நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை தமது கடமையை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளவுள்ளதாக மாகாணசபை அறிவித்துள்ளது. கடந்த மாதம் இவர் கடமையைப் பொறுப்பேற்பதாகக் கூறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அது ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை காலமும் மாகாண ஆளுநராக கடமையாற்றிய திக்ஷன் சந்திரிசிறி வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சாலிய எல்லாவெல நியமிக்கப்பட்டுள்ளார். சாலிய எல்லாவெல சப்ரகமுவ மாகாண சபையில் முதலமைச்சர், அமைச்சர், சபைத்தலைவர் போன்ற பதவிகளையும் வகித்தவர் என்பதும், இறுதியாக நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment