Tuesday, November 18, 2008

வவுனதீவு வைத்திய அதிகாரியின் கொலை விடயத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனதீவு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வந்த பெரும்பாண்மையினத்தை சேர்ந்த வைத்தியர் பாலித பாத்மகுமாரவினதும் அவரது அயல்வீட்டுக்காரரதும் கொலை விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் நால்வரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அங்கு இடம் பெற்ற சம்பவத்தை தொடர்ந்து சுகாதார அமைச்சின் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். இக்கொலைச் சம்பவத்தை தொடர்ந்து அங்கு கடமையாற்றி வந்த பெரும்பாண்மையின வைத்தியர்கள் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடமைக்கு செல்லாமல் சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் கையொப்பம் இட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment